undefined

 சொகுசு வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரச்சார  வாகனங்கள்!

 
 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகளுடன் த.வெ.க., நாம் தமிழர் கட்சிகளும் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் காலத்தில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளதால் பிரசார வாகனங்களுக்கு தேவை அதிகமாகியுள்ளது.

அரசியல் தலைவர்களுக்காக விசேஷமாக வடிவமைக்கப்படும் பிரசார வாகனங்களில் கோவை முக்கிய மையமாக திகழ்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா காலத்திலிருந்தே சொகுசு வசதிகளுடன் வாகனங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இப்போது கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநில தலைவர்களுக்கான வாகனங்களும் கோவையில் உருவாகின்றன.

சுழலும் இருக்கைகள், ஹைட்ராலிக் லிப்ட், எல்.இ.டி. விளக்குகள், சக்திவாய்ந்த ஒலி அமைப்பு என வாகனங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. ஓய்வறை, கழிப்பறை, கண்காணிப்பு கேமரா, கணினி, பிரிண்டர் என அனைத்தும் சேர்க்கப்படுகிறது. இதனால், தேர்தல் நெருங்க நெருங்க கோவை மீண்டும் அரசியல் வாகனங்களின் ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!