இன்று முதல் 29ம் தேதி வரை கருத்துக்கணிப்பு வெளியிட தடை - தேர்தல் ஆணைய உத்தரவு!
இன்று காலை புதுவை, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று 9ம் தேதி காலை 7 மணி முதல் வரும் ஏப்ரல் 29ம் தேதி மாலை 6:30 மணி வரை தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை விதித்து ட் ஹேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்களின் மனநிலையைப் பாதிக்கும் வகையில் அமையும் எந்தவொரு கணிப்பையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் கறாராகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவு அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகத் தொடங்கும் 'அமைதி காலத்தின்' போது, எலக்ட்ரானிக் ஊடகங்களில் எந்தவிதமான தேர்தல் ஆய்வு முடிவுகளையும் காண்பிக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீறிச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 என இரு தேதிகளில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்த பின்னரே, அந்தந்த மாநிலங்களின் வாக்குப்பதிவிற்குப் பிந்தையக் கணிப்புகளை வெளியிட அனுமதி அளிக்கப்படும். ஜனநாயக முறைப்படி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!