undefined

தேர்தல் திருவிழா.. வாக்காளர்களைக் கவர 3 மெகா திட்டங்கள் அறிவிப்பு! - திமுக அரசு தீவிரம்!

 

அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வாக்காளர்களைக் கவரும் விதமாக, ஆளும் தி.மு.க. அரசு இந்த டிசம்பர் மாதத்திலேயே மூன்று மெகா திட்டங்களை அறிவித்துச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. தேர்தல் தேதி பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டால், அதற்குப் பிறகு புதிய திட்டங்களை அறிவிக்க முடியாத நிலை உள்ளதால், இந்த நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

1. கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட திட்டமானாலும், இப்போது மீண்டும் தீவிரப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சுமார் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏசர், டெல், எச்.பி. போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு லேப்டாப் தயாரிப்பதற்கான டெண்டர்கள் வழங்கப்பட்டு, தற்போது 20 லட்சம் லேப்டாப்களும் தயாராகி விட்டன. முதற்கட்டமாக, ஏப்ரல் மாதத்திற்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாதமே தொடங்கி வைக்க இருக்கிறார்.

2. மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்

ஏற்கனவே பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு தற்போது விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத்தொகை கிடைக்காத பல புதிய பயனாளிகளின் புகார்களைக் கருத்தில் கொண்டு, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாதமே தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை

புத்தாண்டின் தொடக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்களைக் கவரும் விதமாக முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கத் தொகையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கம் வழங்கப்பட்டதைப்போல், தேர்தல் வரவிருப்பதால் இந்த ஆண்டு ரொக்கத் தொகைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகப் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 27 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், எவ்வளவு தொகை வழங்குவது என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த மூன்று மெகா திட்டங்களின் அறிவிப்புகளும் இந்த டிசம்பர் மாதம் வெளியாகி, தேர்தல் களத்தை சூடாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!