undefined

தேர்தல் வியூகம்... இன்று மாலை ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

 

இன்றூ மாலை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட தற்போதைய கூட்டணி கட்சிகளுடனான உறவு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பகட்ட ஆலோசனைகள் உட்பட கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

கனிமொழி எம்.பி தலைமையிலான குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சேகரித்த கருத்துகளின் அடிப்படையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கவர்ச்சிகரமான மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விவாதம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கட்சியின் பலத்தை உறுதி செய்வது மற்றும் 'உடன்பிறப்பே வா' போன்ற நிகழ்வுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு, எதிர்க்கட்சிகளின் (அதிமுக, பாஜக மற்றும் தவெக) வியூகங்களை முறியடிக்க, அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான புதிய திட்டங்கள், தேர்தல் களம்: 2026 மே மாதத்துடன் தற்போதைய சட்டசபையின் ஆயுட்காலம் நிறைவடைவதால், இன்னும் சில மாதங்களில் தேர்தல் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

சமீபத்தில் சில தொகுதிகள் தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே சிறு சலசலப்புகள் எழுந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் கூட்டணி ஒற்றுமையை உறுதி செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் களம் காண்பதால், இளம் வாக்காளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான சிறப்பு அறிவுறுத்தல்களை மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் வழங்க உள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!