தேர்தல் பணியில் 25 லட்சம் அதிகாரிகள்... தேர்தல் ஆணையம் அதிரடி!

 

தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 25 லட்சம் அதிகாரிகளைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வன்முறையற்ற மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்யும் நோக்கில், சுமார் 15 லட்சம் தேர்தல் பணியாளர்கள் மற்றும் 8.5 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் இந்த மாபெரும் பணியில் களமிறக்கப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் சுமார் 17.4 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கவும், பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளைக் கண்காணிக்கவும் 1,000-க்கும் மேற்பட்ட மத்தியப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 49,000 நுண் பார்வையாளர்கள் மற்றும் 21,000 மண்டல அதிகாரிகள் தேர்தல் பணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் எந்தவொரு புகாரையும் 100 நிமிடங்களுக்குள் தீர்க்கும் வகையில் 5,100-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் தேர்தல் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும், தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!