முதன்முறை வாக்காளர்களுக்கு 'அல்வா' ... தேர்தல் ஆணையம் அசத்தல்!
கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இளம் வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு சுவையான மற்றும் புதுமையான திட்டத்தை அறிவித்துள்ளது. ஜனநாயகக் கடமையை முதன்முதலாக ஆற்ற வரும் இளம் வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு 'அல்வா' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைக் கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் வெளியிட்டுள்ளார்.
இத்திட்டத்தின்படி, கேரளாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பிரத்யேக அல்வா பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று வாக்குச் செலுத்த வரும் முதல்முறை வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இந்த அல்வா பாக்கெட்டுகளை வழங்கி கௌரவிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குச்சாவடிகளில் இளம் வாக்காளர்களைச் சரியாக அடையாளம் காணவும், இந்த விநியோகப் பணிகளைத் தொய்வின்றி நடத்தவும் கூடுதல் தன்னார்வலர்களை நியமிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்தப் இனிப்பான மற்றும் கனிவான முயற்சி, முதல்முறை வாக்களிக்கக் காத்திருக்கும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிகப்படியான இளைஞர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைக்க இத்திட்டம் ஒரு உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!