undefined

அட... வேட்பாளர் படங்களுடன் தமிழக தேர்தல்...  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்! 

 

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும், நாட்டுக்கே முன்னுதாரணமாகவும் அமையும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் திருவிழாவாக கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பாராட்டினார். ஜனநாயகத்தை காக்கும் பணியில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலையில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

10ஆம் நூற்றாண்டிலேயே குடவோலை முறையில் தேர்தல் நடைமுறை இருந்தது தமிழ்நாட்டில்தான் என அவர் பெருமையுடன் கூறினார். 72 நாடுகள் பங்கேற்ற சர்வதேச தேர்தல் மாநாட்டில் இந்த வரலாற்றை பகிர்ந்ததாகவும் தெரிவித்தார். தேர்தல் அதிகாரிகள் அச்சமின்றி செயல்படலாம் என உறுதி அளித்தார். சமூக வலைதளங்களில் பொய் செய்திகள் பரப்புவோருக்கு எதிராக கடுமையான கண்காணிப்பு இருக்கும் என்றும் எச்சரித்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் இரண்டு கட்டங்களாக எண்ணப்படும் என்றும் கூறினார். வாக்குப்பதிவு நிலவரம் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!