undefined

தொடர்ந்து 3 வது நாளாக மின்சார ரயில் சேவை பாதிப்பு... சென்னையில் பயணிகள் கடும் அவதி! 

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 10, 11-ல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தாம்பரம்–சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வரும் நடைமேடைக்கு பதிலாக 5, 6-ஆம் நடைமேடைகளில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் 5, 6-ஆம் நடைமேடைக்கு வரவேண்டிய சில ரயில்கள் சேத்துப்பட்டில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். வழக்கமாக 10–15 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ரயில், தற்போது 40 நிமிடங்களுக்கு மேலாக தாமதமாக வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை சமாளிக்க தெற்கு ரயில்வே  சென்னை கோட்டம் சார்பில் வழிகாட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில்களை வேகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பயணிகள் சிரமம் நீங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!