டாப் ஸ்லிப்பில் களைகட்டிய 'யானை பொங்கல்' - சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகள் முகாம்களில் 'யானை பொங்கல்' கொண்டாடுவது பாரம்பரியமான ஒன்றாகும்.
கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய யானை பொங்கல் விழா கோவை மாவட்டம் டாப்ஸ்லிப்பில் நடத்தப்படவில்லை. தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த விழா பழைய உற்சாகத்துடன் திரும்பியுள்ளது.
கோழிகமுத்தி முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் 24 கும்கி மற்றும் வளர்ப்பு யானைகள் இந்த விழாவில் பங்கேற்றன. யானைகள் அனைத்தும் குளிப்பாட்டப்பட்டு, நெற்றியில் திருநீறு மற்றும் சந்தனம் பூசி கம்பீரமாக வரிசையாக நிறுத்தப்பட்டன. யானைகளுக்காகத் தனியாகப் பொங்கல் தயார் செய்யப்பட்டது. பின்னர் கரும்பு, வாழைப்பழம், அன்னாசி, தர்பூசணி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் யானைகளுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த விழா நடைபெறுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் டாப்ஸ்லிப்பில் குவிந்தனர். யானைகள் அணிவகுத்து நின்று பொங்கல் சாப்பிடும் காட்சியைக் கண்டு அவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!