யானை மீது ஊர்வலம்... விண்ணதிர ‘சரண கோஷம்’... பம்பை ஆறாட்டு விழாவில் குவிந்த பக்தர்கள்!
யானை மீது ஊர்வலம், விண்ணதிர சரணம் ஐயப்பா கோஷம் என்று பம்பையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆறாட்டு விழாவினைக் கண்டு தரிசித்தனர்.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சபரிமலையில் கடந்த மார்ச் 23ம் தேதி தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில், மேல்சாந்தி கோவில் நடையைத் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று ஆறாட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் "சுவாமியே சரணம் ஐயப்பா" என விண்ணதிர முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக சரங்குத்திப் பகுதியில் 'பள்ளிவேட்டை' நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமி விக்ரகம் சன்னிதானத்திற்குத் திரும்பும் நிகழ்வு பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 'ஆறாட்டு' நேற்று துவங்கிய நிலையில் யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்கப் பம்பை ஆற்றுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பம்பை குளத்தில் ஐயப்பனுக்குப் புனித நீராட்டு எனும் 'ஆறாட்டு' நடைபெற்றது. ஆறாட்டு முடிந்த பின்னர் நேற்று மாலை சன்னிதானத்தில் திருவிழாக் கொடி இறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!