ரயில் மோதி குட்டி யானை பலி… ஏஐ கேமரா இருந்தும் பாலக்காட்டில் சோகம்!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறு வட்டப்பாறை வனப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை யானை விபத்து நடந்தது. அதிகாலை 4.30 மணியளவில் யானைக் கூட்டம் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த யஸ்வந்த்பூர் ரயில் எஞ்சின் மோதியதில் சுமார் 3.5 வயது ஆண் குட்டி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் இந்த பகுதியில் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த அமைப்பு செயல்படுத்தப்பட்ட பிறகு நிகழ்ந்த முதல் விபத்து இதுவாகும். ரயில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டது என்றும், தண்டவாளம் வளைவு பகுதியில் இருந்ததால் ஓட்டுநரால் யானையை முன்கூட்டியே கவனிக்க முடியவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ தகவல் கிடைத்ததும் கேரள வனத்துறையினர் விரைந்து வந்து யானையின் உடலை மீட்டனர். பின்னர் உடல்கூறாய்வு பரிசோதனை நடத்தப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் யானைகள் அதிகமாக நடமாடுவதால் ரயில்களை மேலும் எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!