விண்வெளியில் 10 லட்சம் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு!
விண்வெளியில் 10 லட்சம் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் திட்டத்தின் கீழ் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட உள்ளன.
உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. தொலைதூர பகுதிகளிலும் இணைய வசதி கிடைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய இலக்காகும். இதற்காக கட்டுக்கட்டாக செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன.
இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தேவையான அனுமதிகளை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கோரியுள்ளது. அனுமதி கிடைத்தால், இது உலகளாவிய தகவல் தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!