எலான் மஸ்க் நிறுவனத்தில் இந்தியருக்கு வாய்ப்பு… ஐஐடி மாணவர் தேர்வு!
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களில் பணியாற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவேந்திர சிங் சாப்லட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான ‘சூப்பர் இன்டெலிஜன்ஸ்’ குழுவில் அவர் பணியாற்ற உள்ளார். எலான் மஸ்க் நேரடி பார்வையில் இந்தப் பொறுப்பை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சமூக வலைதள நிறுவனம் மெட்டாவின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளார். மேலும் தென் கொரியாவின் சாம்சங் நிறுவனத்திலும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உள்ளது. செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளவில் கடும் போட்டி நிலவும் நிலையில், இந்தத் தேர்வு இந்தியர்களுக்கு பெருமை அளிப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!