வருஷத்துல ஒரு நாள் மட்டுமே காட்சியளிக்கும் மரகத நடராஜர்... இன்று மிஸ் பண்ணாதீங்க!
வருடத்தில் ஒரு நாள் மட்டுமே இந்த காட்சியைக் காண முடியும். இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி கோயிலில், மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை இன்று வரையிலும் பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஒளி, ஒலி அதிர்வுகளால் சேதம் ஏற்படாமல் இருக்க, ஆண்டு முழுவதும் இந்த சிலை சந்தனக் காப்பால் மூடப்பட்டு இரும்புக் கதவுகளுக்கு பின்னால் வைக்கப்படுகிறது. மார்கழி மாத ஆருத்ரா தரிசன நாளான இன்றைய தினம் மட்டும் அந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
ஆருத்ரா தரிசன தினமான இன்று காலை 8.30 மணிக்கு நடராஜர் சந்நிதி திறக்கப்பட்டு, மரகத நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பால், பழம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் மகாபிஷேகம் நடக்கும். இன்று ஒரு நாள் முழுவதும் சந்தனக் காப்பில்லாமல் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது.
நாளை காலை மீண்டும் சந்தனக் காப்பு செய்து நடை அடைக்கப்படும். இந்த ஒரே நாள் தரிசனத்திற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் உத்தரகோசமங்கைக்கு பக்தர்கள் குவிகிறார்கள். இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசனம் இன்று ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!