undefined

அதிகாலையில் பரபரப்பு... போலீசை வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை!  

 

பெரம்பலூர் அருகே நேற்று அதிகாலை நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த காளிமுத்து என்ற வெள்ளைக்காளி மீது கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறையில் இருந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தனர்.

திண்டுக்கல் சிறையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லும் போது, திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சாலையோர ஓட்டலில் போலீசார் உணவு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், வெள்ளைக்காளியை கொல்ல 6 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் எஸ்ஐ ராமச்சந்திரன் மற்றும் 2 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். எஸ்ஐ துப்பாக்கியால் 10 ரவுண்டு சுட்டபோதும் கும்பல் தப்பியது.

இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ஊட்டியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்த கொட்டு ராஜா என்ற அழகுராஜாவை கைது செய்தனர். அவர் வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசிய முக்கிய நபர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!