undefined

இன்றுடன் முடிகிறது... ஜேஇஇ விடைக்குறிப்பு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலக்கெடு!

 

ஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ (JEE Main) முதற்கட்டத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை தேசியத் தேர்வுகள் முகமை (NTA) வெளியிட்டுள்ளது.  2026-27-ஆம் கல்வியாண்டிற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வின் முதல் அமர்வு (Session 1) கடந்த ஜனவரி இறுதியில் நடைபெற்ற நிலையில், மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களைச் சரிபார்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனவரி 21 முதல் 29-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன. நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட விடைத்தாள்கள் மற்றும் தற்காலிக விடைக்குறிப்புகளைக் கீழ்க்காணும் தளங்களில் சரிபார்க்கலாம்: jeemain.nta.nic.in அல்லது nta.ac.in விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி வைத்து  மாணவர்கள் விடைக்குறிப்புகளைக் காணலாம்..

வெளியிடப்பட்டுள்ள விடைகளில் ஏதேனும் தவறுகள் இருப்பதாகக் கருதினால், அதனை ஆதாரங்களுடன் சவால் செய்ய இன்று கடைசி நாளாகும்: இன்று பிப்ரவரி 6,மாலைக்குள் ஆன்லைன் வழியாகத் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு கேள்விக்கான ஆட்சேபனைக்கும் உரிய தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படுவது அவசியம். சந்தேகங்கள் இருப்பின் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: தொலைபேசி: 011-40759000 / 69227700 மின்னஞ்சல்: jeemain@nta.ac.in

இந்தத் தற்காலிக விடைக்குறிப்புகள் மீதான புகார்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இறுதி விடைக்குறிப்பு மற்றும் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!