undefined

  கே.என். நேரு சகோதரரை தனியாக அழைத்து சென்ற அமலாக்கத்துறை!

 

திருச்சி கே.என்.நேரு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர். இவர் திமுகவின் முதன்மை செயலாளரும் கூட.   கே என் நேரு திருச்சி தில்லைநகர் 5-வது கிராஸில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் நேற்று காலை முதல் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த நிறுவனத்தில் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேரு முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று காலை சுமார் 7.30 மணிக்கு  தில்லைநகரில் உள்ள கே.என். நேருவின் வீட்டிற்கு வந்த அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தில்லை நகர் 10வது கிராஸில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மறைந்த ராமஜெயம் இல்லத்திலும் அமலாக்க துறையினர் சோதனைகள் ஈடுபட்டனர். இதேபோல் கே.என்.நேருவின் உறவினர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சுமார் 10 மணிநேரம் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  


இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்து சென்றனர். அவரிடம் தனியாக தீவிர விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?