EPFO சம்பள உச்சவரம்பு ரூ.25000ஆக உயருமா?
தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படும் EPFO சம்பள உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. அதே அளவு தொகையை நிறுவனங்களும் ஊழியர்களின் கணக்கில் செலுத்துகின்றன.
இப்போது கட்டாய EPFO பங்களிப்புக்கான சம்பள உச்சவரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. இதை ரூ.25,000 ஆக உயர்த்தினால், குறைந்த ஊதியம் பெறும் பலருக்கு பிடித்தம் இல்லாமல் முழு சம்பளமும் கையில் கிடைக்கும். இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு இந்த வரம்பு ரூ.6,500லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த மாற்றம் ஊழியர்களுக்கு உடனடி நிவாரணமாக இருந்தாலும், வருங்கால சேமிப்பு குறையும் என்ற கவலையும் எழுந்துள்ளது. ஓய்வு கால பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என சிலர் எச்சரிக்கின்றனர். அரசு விரைவில் இதுகுறித்து இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!