undefined

ஊழல் பணம் மீட்டால்  பொங்கல் பரிசும், ஒரு முழு ஆண்டு பட்ஜெட்டே போடலாம்... எடப்பாடி கடும் தாக்கு!  

 
 

திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் பணத்தை மீட்டெடுத்தால், மதுரை–கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அந்த பணத்தை வைத்து ரேஷன் கார்டுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு வழங்கலாம் என்றும் விமர்சித்தார். ஒரு ஆண்டுக்கான முழு பட்ஜெட்டையே தாக்கல் செய்யும் அளவுக்கு தொகை இருப்பதாகவும் சாடினார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்ததாக ED தகவல் வெளியிட்டுள்ளதாக அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார். டெண்டர்களில் 7.5 முதல் 10 சதவீதம் கமிஷன் வசூலிக்கப்பட்டதாகவும் கூறினார். இது ‘Tip of the Iceberg’ மட்டுமே என ED தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே #CashForJobs வழக்கில் ரூ.888 கோடி தொடர்பான விசாரணை நடக்கவில்லை என பழனிசாமி குற்றம்சாட்டினார். திமுக ஆட்சி கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மாடல் என்றார். ஆட்சி மாற்றம் வந்தால் ஊழல் செய்தவர்கள் தண்டனை பெறுவது உறுதி என எச்சரித்தார். உண்மையிலேயே குற்றமில்லை என்றால் நேர்மையான விசாரணைக்கு ஸ்டாலின் உத்தரவிடுவாரா என்றும் கேள்வி எழுப்பினா

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!