இபிஎஸ் வாக்குறுதிகள் வெற்று விளம்பரம் ... சேகர்பாபு கடும் தாக்கு!
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார். எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று விளம்பரங்கள் என கூறினார். மக்களை ஏமாற்றும் முயற்சியே இது என்றும் சாடினார்.
திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நேரடியாக பார்த்து வருவதாக அவர் தெரிவித்தார். போலி அறிவிப்புகளுக்கு மக்கள் இனி ஏமாற மாட்டார்கள் என்றார். இபிஎஸ் தேர்தல் அறிக்கை குறித்து பேசுகையில், “வெற்றி பெற மாட்டோம் என தெரிந்த ஒருவர் எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம்” என விமர்சித்தார். ஆண்களுக்கு இலவச பேருந்து, மகளிருக்கு ரூ.2,000, இலவச வீடு, 150 நாள் வேலைவாய்ப்பு போன்ற அறிவிப்புகள் மாநில பொருளாதாரத்தை சீரழிக்கும் என்றார்.
தமிழக முதல்வரை இரண்டாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர வைக்க மக்கள் தயாராக உள்ளதாக சேகர்பாபு கூறினார். திமுக நலத்திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அவரது பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!