இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் - ஐரோப்பிய யூனியன் அதிரடி!
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக் கொள்கைகளால் உலகப் பொருளாதாரம் ஒருவித நிலையற்ற தன்மையில் இருக்கும் சூழலில், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான இந்த நெருக்கம் சர்வதேச வர்த்தக அரங்கில் முக்கியத்துவம் பெறுகிறது. உலக வர்த்தக மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா வென் டர் லியன் இது குறித்துப் பேசுகையில், டாவோஸ் கூட்டத்தை முடித்துக் கொண்டு அடுத்த வாரம் நான் இந்தியா செல்ல உள்ளேன். அப்போது இரு தரப்புக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால், அது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் கால் சதவீதத்தைக் கொண்டிருக்கும். இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, சிலர் இதனை "அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்" (Mother of all trade agreements) என்று குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது அதிக இறக்குமதி வரி விதித்து வரும் நிலையில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தையுடன் கைகோர்ப்பது ஐரோப்பிய நாடுகளுக்குப் பாதுகாப்பான மாற்றாக அமையும்.
இந்தியத் தயாரிப்புகள் ஐரோப்பியச் சந்தைகளுக்கு எளிதாகச் செல்லவும், ஐரோப்பியத் தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வரவும் இது வழிவகுக்கும். ஜவுளி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மைத் துறைகளில் இந்த ஒப்பந்தம் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!