undefined

காலையிலேயே பரபரப்பு... 5 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!

 

சென்னையில் சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் பகுதிகளில்  உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பில்ராத் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டிலும், சென்னை சாலிகிராமத்தில் பாண்டியன் வீட்டிலும்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று விருகம்பாக்கத்தில் முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அதிகாரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சோதனை நடைபெற்று வருவதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்னதாக, 2021ம் ஆண்டு பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறையின் சோதனை நடத்திவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?