undefined

நெல்லையில் பரபரப்பு... மயான வேட்டைக்கு சென்று சாமியாடிய பக்தர் திடீர் மரணம்!

 
நெல்லை அருகே கோவிலில் சாமியாடிய பக்தர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி என்கிற மாடசாமி (55). இவர் அந்த பகுதியில் உள்ள சப்பாணி மாடசாமி கோவிலில் சாமியாடி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் கொடை விழா நடைபெற்ற நிலையில், நள்ளிரவு நடந்த பூஜையின்போது மாடசாமி சாமியாடினார். பின்னர் அவர் கோவிலில் இருந்து மயான வேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

மயான வேட்டை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோவிலுக்கு திரும்பிய மாடசாமி திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக் கண்ட குடும்பத்தினர், பக்தர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விரைந்து சென்று, மாடசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடசாமி ரத்த அழுத்த பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், கோயிலில் கொடைவிழாவுக்காக திரண்டிருந்த பக்தர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?