undefined

பரபரப்ப்பு... நகைப்பறிப்பில் தேடப்பட்டு வந்த கொலையாளியை துப்பாக்கி சூடு நடத்தி  பிடித்த போலீசார்!

 
சேலம் மாவட்டத்தில்  மூதாட்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  கொலையாளி நரேஷ்குமார் பதுங்கி இருக்கும் இடம் குறித்து ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அந்த வகையில் சங்ககிரி அருகே மலை அடிவாரத்தில் சுற்றி வளைத்த போலீசார், வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். மூதாட்டிகளை குறி வைத்து தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் ஓமலூர் நரேஷை   சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நேற்று இரவு துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் சுட்டு பிடித்தனர். 

படுகாயம் அடைந்த கைதி மற்றும் கைதியால் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன், முதல்நிலை காவலர் செல்வகுமார்  படுகாயம் அடைந்த நிலையில் சங்ககிரி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்ட கைதி நரேஷிற்கு முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைதி பதுங்கி இருந்த இடமான சங்ககிரி மலை அடிவாரம் ராயலூர் சாலை அருகே துப்பாக்கி சூடு நடந்த இடத்தினையும் சேலம் சரக டிஐஜி  உமா மற்றும் நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன், முதல் நிலை காவலர் செல்வகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து மூதாட்டிகளை குறிவைத்து தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த  இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?