பரபரப்பு வீடியோ!! நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுப்பு!!
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள ‘பத்து தல’ படம் பார்ப்பதற்காகச் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் பெண்கள் வந்துள்ளனர். அப்போது திரையரங்கத்திற்கு வெளியே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2017ல் கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான ‘மஃப்டி’ படம் சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனையும் செய்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, சிவராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கையும் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓபிலி கிருஷ்ணா இயக்கிறார். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!