"எக்சிட் போல்"லுக்கு தடை...  தேர்தல் ஆணையம் அதிரடி எச்சரிக்கை!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களின் மனநிலையைத் திசைதிருப்பும் வகையில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளுக்குத் தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி முதல் தேர்தல் முடியும் வரை எந்தவிதமான கருத்துக்கணிப்புகளையும் வெளியிடக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவிற்கு பிந்தையக் கருத்துக்கணிப்புகளை   நடத்துவதோ, அவற்றை அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி அல்லது சமூக வலைதளங்கள் என எந்தத் தளம் வழியாகவும் வெளியிடுவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. "ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள், எந்தவொரு வெளிப்புறத் தூண்டுதலும் இன்றி வாக்களிக்க வேண்டும்" என்பதே இந்தத் தடையின் முக்கிய நோக்கம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த உத்தரவை மீறி யாராவது கருத்துக்கணிப்புகளைப் பரப்பினால், அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க, அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடிகள் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி ஏப்ரல் 23-ம் தேதிக்குப் பிறகுதான் "யாருக்கு வெற்றி?" என்கிற அந்த ரகசியம் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!