குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் வெடிவிபத்து... 4 வயது குழந்தை பலி!
ஈரானின் தெற்கில் உள்ள பந்தர் அப்பாஸ் நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. மேலும் பலர் காயமடைந்தனர்.
வெடிப்பு காரணமாக கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன. அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் நொறுங்கின. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆரம்ப விசாரணையில், கேஸ் கசிவு காரணமாக வெடி ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!