இன்று முதல் சென்னை டூ டெல்லி ஒரே நாளில் டெலிவரி... நாடு முழுவதும் 24 'விரைவு தபால்' சேவை அறிமுகம் - தாமதமானால் பணம் வாபஸ்!
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி ஆகியோர் இன்று தபால் துறையின் புதிய மைல்கல்லான ‘24 விரைவு தபால்’ சேவையைத் தொடங்கி வைக்கின்றனர். அவசரத் தேவைகளுக்காக அனுப்பப்படும் தபால்கள் மற்றும் ஆவணங்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் உரியவரிடம் சென்றடைவதை இந்தச் சேவை உறுதி செய்கிறது. முதல்கட்டமாகச் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய ஆறு முக்கிய மாநகரங்களுக்கு இடையே இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இத்துடன், இரண்டு நாட்களில் தபால் சென்றடைவதை உறுதி செய்யும் ‘48 விரைவு தபால்’ சேவையும் இதே நகரங்களில் அறிமுகமாகிறது. இந்தப் புதிய சேவையில் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) மற்றும் குறுஞ்செய்தி ‘எண்ட் டூ எண்ட் என்கிரிப்ட்’ வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தபால் விநியோகத்தில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் தபால் துறை வழங்கியுள்ளது. இது தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு இணையாகத் தபால் துறையின் வேகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக நுகர்வோர்களுக்காகப் ‘பின்னர் பணம் செலுத்தும் வசதி’ , ஒரே நேரத்தில் அதிக அளவில் தபால்களை அனுப்புவோருக்கு இலவச சலுகைகள் மற்றும் ஏபிஐ (API) ஒருங்கிணைப்பு போன்ற நவீன வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் முக்கிய ஆவணங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்ப முடியும். தபால் துறையை நவீனமயமாக்கி, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் நோக்கில் மத்திய அரசு இந்த அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!