undefined

 திருச்செந்தூர் மணியாச்சி எக்ஸ்பிரஸ் ரயில் 4 நாட்கள் பகுதியாக ரத்து! 

 
 


திருச்செந்தூர் – பாலக்காடு வழியாக தினமும் இயக்கப்படும் முன்னுரிமை இல்லாத பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைக்கு தற்காலிக மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. வாஞ்சிமணியாச்சி–திருச்செந்தூர் ரெயில் பாதையில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்றுவருவதால், இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, திருச்செந்தூர்–பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16732) மற்றும் பாலக்காடு–திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (16731) ரயில்கள் நவம்பர் 25, 26, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வாஞ்சிமணியாச்சி–திருச்செந்தூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாட்களில், இந்த ரயில் மணியாச்சியிலிருந்து மதியம் 2 மணிக்கே புறப்பட்டு பாலக்காடை நோக்கி பயணியாகும்.

திடீர் மாற்றம் காரணமாக பயணிகள் தங்களது பயணத்திட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பாதை புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததும், வழக்கம்போல ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!