undefined

  சென்னை–நியூ ஜல்பைகுரி அதிவிரைவு ரயில் தடம் புரண்டு பரபரப்பு !

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி நோக்கி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. ரயில் எண் 22611 புதன்கிழமை காலை தனது பயணத்தை தொடங்கியது. பல்வேறு மாநிலங்களை கடந்து சென்ற இந்த ரயில் இன்று காலை ஒடிஸா மாநிலம் ஜாகபுரா ரயில் நிலையத்தை கடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.

காலை சுமார் 8.51 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ரயிலின் ஒரு குளிர்சாதன பெட்டியும் இரண்டு முன்பதிவில்லா பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு விலகின. இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் அந்த வழியாகச் செல்லும் சில ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!