பயணிகளின் கனிவான கவனத்திற்கு... விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!
மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் சில விரைவு ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. மார்ச் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ஹௌரா விரைவு (12666) மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் நிலையங்களுக்கு செல்லாது. கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டை நிலையங்களில் நின்று செல்லும்.
மார்ச் 4 முதல் 29 வரை குறிப்பிட்ட தேதிகளில் குருவாயூர்–சென்னை எழும்பூர் விரைவு (16128) மாற்றுப் பாதையில் இயக்கப்படும். மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக எழும்பூர் சென்றடையும். சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை நிலையங்களில் நின்று செல்லாது. அதற்கு பதிலாக சிவகங்கை, புதுக்கோட்டையில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 6, 13, 20, 27 தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் செல்லும் சிறப்பு ரயில் (07229) மாற்றுப் பாதையில் இயக்கப்படும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் நிலையங்கள் தவிர்க்கப்படுகின்றன. அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!