undefined

எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி திருவள்ளூரில் நிற்கும் - ரயில்வே அமைச்சகம் அனுமதி!

 

சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான பயணிகள் புழங்கும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில், இனி சென்னை-கோவை மற்றும் சென்னை-பெங்களூரு ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களும், பெங்களூரு மற்றும் கோவையில் பயிலும் மாணவர்களும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இவர்கள் இதுவரை ரயிலில் ஏற வேண்டும் என்றால் திருவள்ளூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் அதே பாதையில் ரயிலில் வரவேண்டிய சூழல் இருந்தது.

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், இது குறித்துப் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதுடன், ரயில்வே அமைச்சக அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார். இதன் பயனாக சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் அதிவேக விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் -  பெங்களூரு டபுள் டெக்கர் விரைவு ரயில் என தற்போது இரண்டு முக்கிய ரயில்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்த ரயில்கள் நின்று செல்லும் அதிகாரப்பூர்வ தேதி மற்றும் நேர அட்டவணை விரைவில் தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்பட உள்ளது. திருவள்ளூர் ஒரு முக்கியத் தொழில் மையமாக இருப்பதால், இந்த ரயில் நிறுத்தங்கள் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் ஊழியர்களின் பயணம் எளிதாகும், இது உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பெரும் உந்துதலாக அமையும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!