பிறப்பு சான்றிதழ் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு!
பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பொதுவாக பிறப்பு பதிவு செய்த நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் பெயரை சேர்க்கலாம். அதற்கு பிறகு இந்த வசதி கிடையாது.
ஆனால், 2000-ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களுக்கும், அதன் பிறகு பிறந்தவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த வாய்ப்பு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இறுதி வாய்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 26-ம் தேதி வரை பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த தேதிக்குள் அனைவரும் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிறப்பு, இறப்பு பதிவு தலைமை பதிவாளர் அரசுக்கு பரிந்துரை அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!