undefined

பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை ஜெய்சங்கர் இலங்கை பயணம்... 'ஆபரேஷன் சாகர் பந்து' மூலம் மீண்டும் கைகொடுக்கும் இந்தியா!

 

'டிட்வா' புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை (செவ்வாய்க்கிழமை) இலங்கை செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராகப் பயணம் மேற்கொள்ளும் அவர், இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் அந்நாட்டுப் பிரதமர் ஹரணி அமரசூரிய உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) கொள்கையின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமையவுள்ளது.

 ஒரு பார்வை இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அந்நாட்டு அரசின் சர்வதேச உதவிக்கான கோரிக்கைக்கு முதல் நாடாக இந்தியா உடனடியாகப் பதிலளித்தது. இதற்காக 'ஆபரேஷன் சாகர் பந்து' என்ற பெயரில் கடந்த நவம்பர் 28 முதல் மிகப்பெரிய நிவாரணப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 1,134 டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உலர் உணவுப் பொருட்கள், தற்காலிகக் கூடாரங்கள், நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மற்றும் 14.5 டன் அளவிலான மருந்துகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ராந்த், ஐ.என்.எஸ். உதயகிரி உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பு மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதுமட்டுமின்றி, இலங்கையின் மஹியங்கனை பகுதியில் இந்திய ராணுவம் சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் 85 பேர் கொண்ட குழுவினர் இரவு பகலாகப் பணியாற்றி, சுமார் 7,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிா்காக்கும் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்கள் மீட்புப் பணிகளில் நேரடியாகப் பங்கேற்றன.

அமைச்சர் ஜெய்சங்கரின் இந்தப் பயணம், நிவாரணப் பணிகளைப் பார்வையிடுவதுடன் மட்டுமல்லாமல், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 248 டன் எடையுள்ள பெய்லி பிரிட்ஜ் (Bailey Bridge) பாகங்களை இந்தியா விமானம் மூலம் அனுப்பிப் பாலங்களைச் சீரமைக்க உதவி வருகிறது. நெருக்கடியான காலங்களில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா எப்போதும் இருக்கும் என்பதை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!