undefined

 பயணிகள் தடுமாற்றம்... ரயில் சேவை ரத்து... சென்னையில்  கூடுதல் பேருந்துகள் இயக்கம்!  

 

சென்னையில் இன்று (20 பெப்ரவரி 2026) முதல் கடற்கரை–தாம்பரம்–செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக இது 45 நாட்கள் வரை நீடிக்க உள்ளது. இந்த மாற்றம் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

இதனை சமாளிக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) வழக்கமான பணிகளுக்கு மேலாக கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டம் எடுத்துள்ளது. ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு வரையில் மொத்தம் 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. அவை வழக்கமான சேவைகளுடன் சேர்ந்து பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன.

மேலும், தேவை பிரகாரம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் MTC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இயக்கத்தை கண்காணிக்குமாறு சொல்லப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போக்குவரத்து வசதியைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!