நாடு முழுவதும் பிப்ரவரி 15 வரை நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை!
நாடுமுழுவதும் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் பிப்.15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மூலம் கண் நீர் அழுத்த நோய் உள்ளிட்ட கண் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர் சவுந்தரி கூறுகையில், உலகம் முழுவதும் 9 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் மட்டும் 1.30 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்களில் சுரக்கும் நீரின் அழுத்தம் அதிகரிப்பதே இந்த நோய்க்கு காரணம் என்றும், இதை அலட்சியப்படுத்தினால் பார்வை நரம்புகள் பாதித்து நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகம் காணப்படும் இந்த நோய் தற்போது இளம் வயதினரிடமும் அதிகரித்து வருகிறது. ஸ்டீராய்டு மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீண்ட காலம் பயன்படுத்துவதும் முக்கிய காரணமாக உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் போவதால், விழிப்புணர்வே முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த இலவச முகாம் நடத்தப்படுவதால், பொதுமக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!