போலி ஆவண கும்பல் 1 கோடி நில மோசடி… பெண் தாசில்தார், ஆர்ஐக்கு தண்டணை!
திருவாரூர் மாவட்டத்தில் நிலம் தொடர்பான ஆவணங்களைப் போலியாக உருவாக்கி, தேசிய நெடுஞ்சாலை துறையை ஏமாற்றி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில், சென்னையை சேர்ந்த பாரூக் அகமதுக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மலேசியாவில் வசித்து வரும் ஹெரிபா ராபியத்துல் பதரியாவின் பவர் பத்திரத்தை பயன்படுத்தி, அவர் குறிப்பிடாத நிலங்களுக்கும் போலி பத்திரங்கள் தயார் செய்து, தஞ்சை–நாகை தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்தும் போது ஆவணங்களை சமர்ப்பித்து தொகையைப் பெற்றது விசாரணையில் உறுதியானது.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த ஓய்வு பெற்ற தாசில்தார் ஞானசுந்தரி மற்றும் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரனுக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நில உரிமையாளரின் புகாரின் பேரில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி விசாரணை நடந்து, பாரூக் அகமது உள்ளிட்ட மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்கிய நீதிபதி லதா, அரசை ஏமாற்றி பெரிய அளவில் மோசடி செய்தது சமூகத்திற்கு ஆபத்தானது என்றும், கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் குற்றத்தை முழுமையாக நிரூபிப்பதாகவும் கூறி தண்டனையை அறிவித்தார். இந்த தீர்ப்பு, அரசு நிலம் மற்றும் ஆவண மோசடிகளுக்கு எதிராக ஒரு கடும் எச்சரிக்கை என சட்டவாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!