முன்னாள் மனைவிகள் மீது பிரபல நடிகர் பரபரப்பு புகார்!
தமிழ், மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் பாலா. இவர் 2002ம் ஆண்டு அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். 2014ம் ஆண்டு அஜித்குமார் நடித்த வீரம், அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் பாலா தனது முன்னாள் மனைவிகள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா தனது மனைவி கோகிலாவுடன், கொச்சியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், தனது முன்னாள் மனைவிகள் மீது புகார் கொடுத்துள்ளார்.
எனது 2வது மனைவியான பாடகி அம்ருதா சுரேஷும், 3வது மனைவியான டாக்டர் எலிசபெத்தும் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர் எனவும் அஜு அலெக்ஸ் என்ற யூடியூபர் தொடர்ந்து என்னைப் பற்றி தரக்குறைவான செய்திகளை வெளியிட்டு, லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகின்றனர் எனவும் புகாரில் நடிகர் பாலா குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!