undefined

பிரபல நடிகர் விஜய் கிருஷ்ணா காலமானார்.... பாலிவுட் திரையுலகில் சோகம்!

 

இந்தி திரைப்பட உலகின் மூத்த நடிகரான விஜய் கிருஷ்ணா தனது 81-வது வயதில் காலமானார். அவரது மறைவு குறித்து நடிகை Lilette Dubey மார்ச் 3-ஆம் தேதி சமூக வலைதளத்தில் பதிவு செய்து உறுதிப்படுத்தினார். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கிருஷ்ணா பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சஞ்சய் லீலா பன்சாலி  இயக்கிய தேவதாஸ்   திரைப்படத்தில் ஷாரூக்கான்  நடித்த தேவதாஸ் கதாபாத்திரத்தின் தந்தையாக நடித்தது அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நினைவில் நிற்கும் வகையில் இருந்தது.

விஜய் கிருஷ்ணாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த Lilette Dubey, “அவர் மிகவும் புத்திசாலித்தனமான நடிகர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்று உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டார். அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!