பிரபல நடிகை புற்றுநோயால் காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி!
ஜப்பானிய மாடலும், நடிகையுமான மெகுமி ஃபுருயா, 4வது நிலை பெருங்குடல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 47 வயதான அவர், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி இறந்ததாக தற்போது அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 2022ஆம் ஆண்டு மெகுமிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடைசி வரை நோயை எதிர்த்து துணிவுடன் போராடியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாடலிங் மற்றும் நடிப்புத் துறைகளில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் மெகுமி ஃபுருயா. அவரது மறைவு, ஜப்பானிய திரையுலகிலும் ரசிகர்களிடமும் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!