அரசியல் கட்சி தலைவருடன் பிரபல நடிகை காதல் திருமணம்.. வெளியான வீடியோ!
பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர். 2009ஆம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமான இவர், இவர் ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு, நீல் பட்டி சன்னாட்டா போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். திரைப்படம் மட்டுமல்லாது சமூக விஷயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து ஒரு செயற்பாட்டாளராகவும் ஸ்வரா பாஸ்கர் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்வரா பாஸ்கர் தற்போது சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஃபஹத் ஜிரார் என்பவரை திருமணம் செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஃபஹத் ஜிரார், அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா மாநில இளைஞர் அணித் தலைவராக உள்ளார்.
இவர் சிஏஏவுக்கு எதிரான போராட்டம், ஆரே காலனியில் மெட்ரோவுக்கா மரம் வெட்டப்படுவதற்கு எதிரான போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில், முதல்முறையாக ஸ்வரா பாஸ்கர் - ஃபஹத் இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் அடிக்கடி பேசி பழகிய நிலையில், இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்தது. இந்த நிலையில், இருவரும் தற்போது திருமணம் செய்துள்ளனர்.
நடிகை ஸ்வரா பாஸ்கர், அண்மையில் ராகுல்காந்தி மேற்கொண்ட இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்திலும் பங்கேற்று ராகுல்காந்தியுடன் நடந்துசென்றார். அதேபோல் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நடிகை கங்கனா ரணாவத்துக்கும் அவரது கருத்துக்கும் அவ்வப்போது நடிகை ஸ்வரா பாஸ்கர் பதிலடி கொடுத்து வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க