பிரபல ஆவணப்பட தயாரிப்பாளர் காலமானார்... !
பழம்பெரும் ஆவணப்பட தயாரிப்பாளர் எஸ்.கிருஷ்ணசாமி (88) சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். இந்திய ஆவணப்பட உலகில் தனித்துவமான அடையாளம் பதித்த அவர், தனது நீண்ட கால படைப்புப் பயணத்தில் வரலாறையும் சமூகத்தையும் கேமராவின் வழியே பேச வைத்தவர்.
‘இண்டஸ் வேலி டூ இந்திரா காந்தி’ என்ற ஆவணப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்ற எஸ்.கிருஷ்ணசாமி, சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் வரலாறு மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பயணம் குறித்து பல முக்கிய ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். அவரது படைப்புகள் ஆய்வு சார்ந்தும், தகவல் நிறைந்தவையாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணப்படத் துறைக்கு அவர் செய்த சேவையை பாராட்டி, 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. எஸ்.கிருஷ்ணசாமியின் மறைவு, இந்திய ஆவணப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!