undefined

பிரபல மாடல் அழகி கொலையில் திருப்பம்... உடலை சூட்கேஸில் வைத்து புதைத்த காதலன்!

 

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியும், அழகுக்கலை நிபுணருமான ஸ்டெபானி பைபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், திடீர் திருப்பமாக காதலனே மாடல் அழகியைக் கொலைச் செய்து, உடலை சூட்கேஸில் மறைத்து வைத்து புதைத்ததாக வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

allowfullscreen

கடந்த மாதம் 23ம் தேதி மாடல் அழகி ஸ்டெபானி, திடீரென மாயமானது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மாயம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரின் சந்தேகம் அவரது முன்னாள் காதலன் மீது திரும்பியது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அந்த நேரத்தில், காதலை கைவிட்ட ஆத்திரத்தில் ஸ்டெபானியை கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும், ஸ்லோவேனியா எல்லை அருகே ஒரு சூட்கேஸில் உடலை வைத்து புதைத்ததாக தகவல் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் குறியிட்ட இடத்தில் தோண்டியபோது, அந்த சூட்கேஸில் ஸ்டெபானி பைபரின் உடலை கண்டெடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த கொலைக்குச் சதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபரின் தந்தை மற்றும் சகோதரரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!