undefined

பிரபல பாப் பாடகி மடோனா கவலைக்கிடம்.. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! ரசிகர்கள் பிரார்த்தனை!

 

பிரபல பாப் பாடகி மடோனா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 64. தற்போது  பாடகி மடோனா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த ஜூன் 24ம் தேதி மடோனா செரிஷ் தீவிர பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பாடகி மடோனா உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை சரியில்லாததால் பாடகரின் சுற்றுப்பயணம் மற்றும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. அவர் விரைவில் பூரண குணமடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

 மடோனா ஏழு முறை கிராமி விருதை வென்று இசைத்துறையில் ஒரு பெரிய முத்திரை பதித்தவர்.  மடோனா   2020ல்  தனது "மேடம் எக்ஸ்" சுற்றுப்பயணத்தில்  ஏற்பட்ட விபத்தின் காரணமாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உலகம் முழுவதும் இசை ரசிகர்களை பெற்ற அவரின் முழுப் பெயர்  மடோனா லூயிஸ் சிக்கோனே. இவர்   1958,   ஆகஸ்டு 16ல் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பே என்ற நகரில் பிறந்தவர். இவரது தந்தை சில்வியோ அந்தோணி சிக்கோனே. தாய் மடோனா வெரோனிகா. மடோனா தனது 5வது  வயதிலேயே தாயை இழந்தவர்.  பாட்டியின் ஆதரவில் வளர்ந்த மடோனாவின்  ஆசிரியர்  கிறிஸ்டோபர், மடோனாவின் திறமையைக் கண்டு ஊக்கப்படுத்தினார்.   குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை தொடர முடியாமல் கையில் வெறும் 32 டாலருடன் பிழைப்பைத் தேடி நியூயார்க் நகருக்கு சென்றார்.

ஒரு விடுதியின் கேளிக்கை அரங்கில், பின்னணி நடனம் ஆடுபவராக வாழ்க்கையை அங்கே தான் தொடங்கினார்.அத்துடன்   இசைக்குழு ஒன்றில் பின்னணி பாடகராகவும் சேர்ந்தார். அதன் பிறகு தனிபாடல்கள், ஆல்பங்களையும் வெளியிட்டார்.  இவரது 'எவ்ரிபடி' என்ற இசைத் தொகுப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  அதற்கு பிறகு ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டார். 1986ல் மடோனாவின் `ட்ரூ ப்ளூ' எனும் இசை ஆல்பம் விற்பனையில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தது.  மடோனா பாடல்கள் எழுதவும், திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தது  பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், சிறந்த நடிகையாக வலம் வந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் வசூல் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்