undefined

திரையுலகில் அதிர்ச்சி!! ”16 வயதினிலே ” தயாரிப்பாளர் ராஜ்கண்ணு காலமானார்!! 

 

தமிழ் திரையுலகின் பழம் பெரும்  சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. இவர்  உடல்நலக்குறைவால் காலமானார். வயது 77.1977ல்  பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி சக்கை போடு போட்ட படம்  “16 வயதினிலே”.  அம்மன் கிரியேஷன்ஸ்   எஸ்.ஏ.ராஜ்கண்ணு இந்த படத்தை தயாரித்திருந்தார். இதன் பிறகு  பல வெற்றிப்படங்களை தயாரித்தவர்.  

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உயிரிழந்து  விட்டதாக இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த  பதிவில், “16 வயதினிலே" திரைப்படத்தின்  மூலம்  என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியையும், வேதனையையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு.   ஆழ்ந்த இரங்கல்’ என தெரிவித்துள்ளார்.எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவுக்கு திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள், பிரலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்