பிரபல சின்னத்திரை நடிகர்  தூக்கு போட்டு தற்கொலை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 

கன்னட சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் சம்பத் ஜே.ராம்.  இவருக்கு வயது 35 . இவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பத் ஜே.ராம்  சின்னத்திரையில் மட்டுமல்ல கன்னட திரைப்படங்களிலும் நடித்தவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான  ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ  நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

மேலும் இவர் நடித்த அக்னி சாக்ஷி என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் நடிகர் சம்பத் திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று நீலமங்கலா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

திரைத்துறையினர், பிரபலங்கள் பலரும் அவரது திடீர் தற்கொலைக்கு  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக சம்பத்திற்கு சின்னத்திரை மற்றும் பெரிய திரையில்  போதிய வாய்ப்புகள் இல்லாததால் மன அழுத்தம் அதிகரித்து வந்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!