பிரபல தமிழ்பட இயக்குநர், நடிகரின் வீடு ஜப்தி... தவிக்கும் மனைவி!
மறைந்த பிரபல நடிகர், இயக்குநர் ராஜசேகரின் வீடு, ஹவுசிங் லோன் கட்டாததால் நீதிமன்றம் ஜப்தி செய்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா குடியிருந்த வடபழனியில் உள்ள வீட்டை, ஹவுசிங் லோன் கட்டாததால் கோர்ட்டு ஜப்தி செய்துள்ளது.
குழந்தை இல்லாமல் கணவரே உலகம் என்று வாழ்ந்து வந்த தாரா, கடந்த 2019ம் ஆண்டு ராஜசேகர் இறந்த பிறகு ஹவுசிங் லோன் கட்ட முடியாமல் தவித்து வந்திருக்கிறார்.
கணவன் இல்லாத நிலையில், ஆங்காங்கே இருந்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயன்றபோது, உதவி செய்ய வந்த சிலரும் அந்த பணத்தை ஏமாற்றி போய்விட்டதாகவும், இதனால் பணம் இல்லாமல் என்னசெய்வதென்றே தெரியாமலும் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் கோர்ட்டில் ஜப்தி ஆர்டர் கொடுக்கப்பட்டதால் இன்று காலை கோர்ட்டு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ராஜசேகர் மனைவி தாராவை வீட்டிலிருந்து வெளியேற்றினர்.
தமிழ் திரையுலகில் மதிக்கக்கூடிய இயக்குனரும், நடிகருமாக இருந்த ராஜசேகருக்காக கூட யாரும் தனக்கு உதவவில்லை என்று தாரா வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!