undefined

 பிரபல தமிழ்பட தயாரிப்பாளர் ராமனாதன்  காலமானார்!

 
 


பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்  M.ராமனாதன்( 72) உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில்  இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 

சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள்  பணியாற்றியுள்ள தயாரிபாளர் ராமனாதனின் தயாரிப்பில் , வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி,பிரம்மா, உடன்பிறப்பு, வில்லாதி  வில்லன் ஆகிய  படங்களில் சத்யராஜ் கதாநாயகனாக  நடித்துள்ளார். 

விஜயகாந்த் கதாநாயகனாக  நடிக்க, பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்ச் செல்வன் படத்தையும் ராமனாதன் தயாரித்துள்ளார். இவருக்கு பிரமிளா  என்ற மனைவியும், காருண்யா,  சரண்யா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் சென்னை வந்ததும் புதன்கிழமையன்று சென்னையில் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?