இளையராஜா கச்சேரியில் ரசிகர்கள் வாக்குவாதம்... பெரும் பரபரப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காளஸ்திபுரம் பகுதியில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்த கச்சேரிக்காக ரசிகர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். பெங்களூரு, மைசூரு மட்டுமின்றி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் திரண்டு வந்தனர்.
ஆனால் அரங்கிற்குள் இடமில்லை என கூறி முன்பதிவு செய்த ரசிகர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் நுழைவுவாயில் பகுதியில் ரசிகர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முன்கூட்டியே டிக்கெட் எடுத்தும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அனுமதி இல்லை என்றால் பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தகவலறிந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு காத்திருந்த அனைத்து ரசிகர்களும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் இளையராஜாவின் இன்னிசை கச்சேரியை உற்சாகமாக ரசித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!