undefined

தந்தைக்குத் திதி கொடுக்க சென்ற விவசாயி கடலில் மூழ்கிப் பலி!

 

தை அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகளில் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் காவிரி சங்கமத் துறையில் புனித நீராடியபோது ஏற்பட்ட விபத்து ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மகாராசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (52). விவசாயியான இவர், தை அமாவாசையை முன்னிட்டுத் தனது தந்தைக்குத் திதி கொடுத்துப் பித்ரு கடன்களை நிறைவேற்றத் தனது குடும்பத்தினருடன் இன்று அதிகாலை பூம்புகார் வந்துள்ளார்.

பூம்புகார் கலங்கரை விளக்கம் எதிரே உள்ள கடல் பகுதியில் முருகானந்தம் புனித நீராடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கிய அவர், சுமார் 200 மீட்டர் தூரத்திற்குக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தனது கண் முன்னாலேயே முருகானந்தம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட அவரது உறவினர்கள் கதறித் துடித்தனர்.

அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் குழுமப் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாகக் கடலுக்குள் இறங்கி முருகானந்தத்தைத் தேடினர். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருக்கு ஆப்பத்தான நிலையில் இருந்த அவரை மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர். அவருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!